
2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் மற்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும்போது,எந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்கிறாரோ அந்த எண்ணிற்கு முன்னாள் 0 பூஜ்யத்தை சேர்ப்பது அவசியம் என TRAI தொலைத்தொடர்பு அமைப்பு தெரிவித்துள்ளது .
எடுத்துக்காட்டாக ,ஒரு லேண்ட்லைன் வாடிக்கையாளர் 97##07##57 என்ற என்னை தொடர்பு கொள்ளும்போது ,இந்த எண்களுக்கு முன்னால் ,அதாவது 097##07##57 என்று பூஜ்யத்தை முன்னால் சேர்த்து டயல் செய்வது அவசியம் என தொலைத்தொடர்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது . இந்த அதிரடி மாற்றமானது 2021 ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக TRAI அமைப்பு தெரிவித்துள்ளது .
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அனைத்து லேண்ட்லைன் எண்கள் வழியாகவும் மொபைல் எண்களை டயல் செய்யும் போது பூஜ்ஜியத்தை சேர்ப்பதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. தற்போது இது 2021 அன்று அமலுக்கு வரும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது .
வாடிக்கையாளர் ‘0’ என்கிற எண்ணை-ஐ முன்னால் (Prefix -ஐ) பயன்படுத்தாமல் எதாவது ஒரு மொபைல் எண்ணிற்கு அழைத்தால், அவர் டயல் செய்யும் போதெல்லாம் பொருத்தமான அறிவிப்பு வாடிக்கையாளருக்கு இயக்கப்படும் .மேலும் பூஜ்ஜியத்தின் முக்கியத்துவம் குறித்து வாடிக்கையாளருக்கு விளக்கப்படும் என TRAI அமைப்பு தெரிவித்துள்ளது.