
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கொரோனாவின் இரண்டாவது அலை தீவீரமாக பரவத் தொங்கியது.மேலும் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வந்தது.இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.ithankaaranamaga பல மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,890 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,32,898 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,207 ஆகும் .
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 36,73,802 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 18,04,57,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 31 கோடியே 30 லட்சத்து 17 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.