டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை..

டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவனி லெகாரா முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

Next Post

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி : வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர்..

Mon Aug 30 , 2021
டோக்கியோ பாராஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். டெல்லியை சேர்ந்த 24 வயதுடைய யோகேஷ் பெற்றுள்ள வெள்ளியால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 3 வெள்ளி […]
Yogesh-Kathuniya-paraolymbic-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய