டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் : இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்று சாதனை..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.பிரமோத் பகத் ஒடிசாவை சேர்ந்தவர். இவருக்கு வயது 33 ஆகும்.

இந்தியாவின் மற்றுமொரு வீரரான மனோஷ் சர்கார் டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் டைசுகேவை 20-22, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மனோஷ் சர்க்கார் வென்றார். மனோஜ் சர்க்கார் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு இதுவரை 17 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பாராலிம்பிக்கில் 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Sep 4 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,315 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 244 பேருக்கும்,சென்னையில் 167 […]
district-wise-corona-updates-4-9-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய