இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் – புதிதாக 45,892 பேருக்கு தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்று பாதிப்பை விட இன்றைய பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 45,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,07,09,557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,98,43,825 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,028 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 44,291 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,60,704 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 36,48,47,549 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Thu Jul 8 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 366, ஈரோட்டில் 251 பேருக்கும்,சேலத்தில் 205 பேருக்கும், தஞ்சாவூரில் 190 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த […]
district-wise-abstract-of-cases-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய