இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 20,799 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,34,702 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 12,297, மகாராஷ்டிராவில் 2,692, தமிழ்நாட்டில் 1,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,997 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,31,21,247 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,64,458 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று 23,46,176 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 90 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Mon Oct 4 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,864 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,666-ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 16 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 181 பேரும், கோவையில் […]
district-wise-corona-updates-4-10-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய