இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 440 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,32,519 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,85,923 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,169 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,67,415 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 56,06,52,030 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் : AICTE அனுமதி..

Wed Aug 18 , 2021
பிடெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல் படிப்பையும் படிக்க அனுமதி வழங்கலாம் என்று ஏஐசிடிஇ, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பிடெக் படிப்பை எடுத்துப் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரிஅடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான செய்முறையையும் படிக்க உரிய அனுமதி வழங்கப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது ஏஐசிடிஇ-யின் நிர்வாகக் குழுவின் 144-வது ஆலோசனைக் குழு ஜூலை 13-ம் தேதி […]
AICTE-latest-news
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய