இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு – புதிதாக 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,26,754 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,56,757 ஆக உள்ளது.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 41,096 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,14,159 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை 49,53,27,595 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 49 கோடியே 53 லட்சத்து 27 ஆயிரத்து 595 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

இன்று முதல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடக்கம்..

Fri Aug 6 , 2021
தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2துணைத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.தமிழகத்தில் கொரோன பெருத்தொற்று காரணமாக பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்ளுக்கான தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. இதன்படி தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு இன்று (ஆக.6) தொடங்கி 19-ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் […]
plus-2-sub-exams-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய