இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,35,309 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 248 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,50,375 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,48,291 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,36,643 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும் வாய்ப்பு - மருத்துவ நிபுணர் கணிப்பு..

Sat Oct 9 , 2021
கொரோனா வைரஸ் தொற்றானது, சாதாரண ஜலதோஷ வைரஸ் போல மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என்று இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் ,கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் […]
corona-virus-mutated
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய