இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,382 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.97 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,655 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 459 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,14,74,683 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,927 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 5,84,055 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 6,51,17,896 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடான ரஷியா

Thu Apr 1 , 2021
கொரோனா வைரஸானது உலகையே கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி மருந்துகளை தங்களது மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன. இந்த கொடிய கொரோனா வைரஸானது மனிதர்கள் மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று […]
corona-virus-spread-in-animals
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய