இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் – புதிதாக 43,509 பேருக்கு கொரோனா தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோன தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,15,28,114 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,22,662 ஆக உயர்ந்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,01,612 ஆக உள்ளது.நேற்று ஒரே நாளில் 38,465 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,03,840 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 45,07,06,257 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 27% இட ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு

Thu Jul 29 , 2021
இந்திய மருத்துவ படிப்பில் வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அகில இந்திய கோட்டாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் […]
Medical-Quota-27-percentage-reserved-for-OBC
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய