இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து படிப் படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தாலும்,உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,59,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,60,31,991 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,209 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,12,735 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,91,331 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 30,27,925 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 19,18,79,503 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) முடிவுகள் வெளியீடு..

Fri May 21 , 2021
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு ( NTSE ) முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.டிசம்பர் 2020 -21 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். NCERT ஒப்புதல் பெற்றபின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NTSE-(X-STD) – (DEC-2020-21)-Results
NTSE-exam-results-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய