இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,732 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,38,088 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,87,673 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53.61 கோடியாக உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

Sat Aug 14 , 2021
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் […]
TN-Agriculture-budget-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய