இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கேரளாவில் புதிதாக 20,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,16,13,993 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,23,810 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,81,263 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 46.15 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் 35.98 கோடி பேருக்கு முதல் டோசும், 10.16 கோடி பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

தமிழ் வழியில் பயின்று குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் கவனிக்க வேண்டியவை..

Sat Jul 31 , 2021
தமிழ் வழியில் பயின்று குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் தங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 நடத்தப்பட்டது.முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ளனர். கீழ்க்காணும் கல்வித் தகுதிகளையும், தமிழ் வழியில் பயின்றதற்கான […]
tnpsc-preliminary-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய