இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்- புதிதாக 30,093 பேருக்கு தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,03,53,710 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆகும்.நேற்று ஒரே நாளில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,06,130 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 41,18,46,401 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

Tue Jul 20 , 2021
நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் செப். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் எழுத விரும்பும் மாணவா்கள் ntaneet.nic.in […]
neet-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய