இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 3,66,161 கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது தமிழகம் ,கர்நாடகம் ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,26,62,575 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,71,222 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,46,116 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 37,45,237 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 17,01,76,603 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து - மத்திய அரசு அனுமதி

Mon May 10 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.ஒரு பக்கம் கொரோனா அதிகரித்து வருவதும் ,மறுபக்கம் கொரோனவிற்கான எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டும் வருகிறது. கொரோனா எதிர்ப்பு மருந்திற்கு இந்தியாவில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே அவசர கால மருந்தாக டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற எதிர்ப்பு மருந்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) : இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பு மருந்திற்கு […]
2DG-corona-medicine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய