இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் – இன்று புதிதாக 54,069 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,321 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,63,740 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,981 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,27,057 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும் நேற்று வரை 30,16,26,028 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Thu Jun 24 , 2021
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து மற்றும் மாநிலங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2 மாநில பொதுத்தேர்வை ரத்து […]
Plus-2-mark-system
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய