
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு நாள்தோறும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2726 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,82,80,472 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 25,90,44,072 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.