இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 18,987 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. புதிய பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,435 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,62,709 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,06,586 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 96,82,20,997 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 35,66,347 டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

முகக்கவசம் நம் உயிர் கவசம் : தென்றல் காற்றிலும் பரவும் கொரோனா - ஆராய்ச்சி தகவல்..

Thu Oct 14 , 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் வீட்டை விட்டு வெளியில் வந்து ஒருவர் , இருமுகிற போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என கண்டறிந்துள்ளனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் அமித் அகர்வால் கூறும்போது, “எங்கள் ஆய்வு முடிவுகள் […]
corona-spread-in-air
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய