இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15.49 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,65,148 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,780 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,51,731 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,26,188 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 34,87,229 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 16,04,94,188 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல் ..

Wed May 5 , 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வ்ருவதன் காரணமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோன தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. *நாளை காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *மேலும் , ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *உணவகங்கள், பேக்கரிகளில் […]
corona-new-restrictions-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய