இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : இன்று புதிதாக 56,211 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது,நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,028 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,93,021 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,114 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 5,40,720 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 6,11,13,354 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Post

அபோபிஸ் என்ற சிறுகோள் 2068-ல் பூமியைத் தாக்குமா! நாசா விளக்கம்!

Tue Mar 30 , 2021
2068ம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என பல வதந்திகள் சில மாதங்களாவே பரவி வருகின்றன.இதனால் மனித இனம் அழிய நேரிடும் எனவும் கூறப்பட்டது.,பல குழப்பங்களும் அச்சங்களும் அனைவரின் மத்தியில் நிலவி வருகிறது.இக்குழப்பமான நிலைக்கு நாசா விளக்கம் ஒன்றை அளித்துள்ள்ளது. நாசா விண்வெளி அமைப்பானது, 2068 ஆம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என்ற கூற்றை நிராகரித்துள்ளது.மேலும்,நூறு ஆண்டு காலத்திற்கு எந்தவொரு அபாயகரமான விண்வெளி […]
Apophis-hit-Earth-in-2068
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய