
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.கொரோனாவின் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தற்போது தமிழகம் ,கர்நாடகம் ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,92,676 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,30,960 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,38,270 ஆகும் .
இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 37,23,446 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 16,73,46,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.