இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்..

இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,20,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,86,94,879 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,380 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,95,549 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,082 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக 15,55,248 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 22,78,60,317 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக - கொரோனா பாதிப்பு நிலவரம் ..

Sat Jun 5 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப் படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 21,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணியளவில் முடிவடையும் நிலையில் ,தற்போது தொற்று குறைவாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2,663 பேருக்கும், […]
district-wise-active-cases-in-tamilnadu-5-6-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய