இந்தியாவில் கொரோனா நிலவரம் : புதிதாக 16,156 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,42,31,809 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 9,445 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் 1,485, தமிழ்நாட்டில்1,075, மேற்கு வங்கத்தில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 733 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,56,386 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,14,434 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,60,989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் நேற்று 49,09,254 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 104 கோடியே 4 லட்சத்தை கடந்துள்ளது.

Next Post

நீட் தேர்வு முடிவை வெளியிட அனுமதி - உச்சநீதிமன்றம் உத்தரவு..

Thu Oct 28 , 2021
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள். இந்நிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.மேலும் இந்த 2 பேரும் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த […]
NEET-Result-Announced
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய