
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக 30,941 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,28,10,845 கோடியாக ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,020 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,93,644 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,964 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,78,181 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 65,41,13,508 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.