இந்தியாவில் ஒரே நாளில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகியுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையை காட்டிலும் தீவிரமாக உள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நோய்த் தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் ,ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது தமிழகம் ,கர்நாடகம் ,மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 37,15,221 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு

Tue May 11 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது.நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவின் நிலையறிந்து பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸின் வகை பி-1617 ஆகும்.இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட […]
Mutated-korona-virus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய