இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,99,925 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 267 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,65,349 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,09,708 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,787 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,24,868 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது கடந்த 531 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். நாடு முழுவதும் நேற்று 51,59,931 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 115 கோடியே 79 லட்சத்தை கடந்துள்ளது.

Next Post

பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு தேதி வெளியீடு..

Sat Nov 20 , 2021
பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட கலந்தாய்வு 21.11.2021 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக கலங்தாய்வு நாள் மாற்றம் செய்யப்பட்டு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாளில் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tribal-welfare-school
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய