
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பு 12.12 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோன அலை வீசி வருகிறது. இதில் குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை (புதன்கிழமை) நிலவரப்படி, நாடு முழுவதும் புதிதாக 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,38,734 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
ICMR புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,45,284 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,044 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 2,34,406 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 3,50,64,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.