இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் ..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,26,480 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 236 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,66,147 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,39,46,749 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,13,584 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது கடந்த 536 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.நாடு முழுவதும் நேற்று 71,92,154 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 117 கோடியே 63 லட்சத்தை கடந்துள்ளது.

Next Post

குறைந்த செலவில் சிறப்பான மருத்துவ படிப்பு..

Tue Nov 23 , 2021
உலகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகள் சிறப்பான முறையில் பாடத்திட்டத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு அமைத்து வருகின்றது. இந்த வகையில் வங்கதேசத்தில் மருத்துவக்கல்வி சிறப்பான ஒரு பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. வங்கதேச அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவக்கல்வி, இந்திய மருத்துவக் கல்வியின் பாட திட்டத்தையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது தற்போது இந்தியாவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பை பெறுவதற்கு சாமானிய மக்களுக்கு சாத்தியமற்றதாய் இருக்கிறது. ஆனால் வங்க தேசத்தில் மருத்துவக்கல்விக்கட்டணம் […]
MBBS-for-indian-students-in-bangladesh
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய