இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98- சதவிகிதமாக உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,98,23,546 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,86,78,390 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,85,137 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 97,743 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,60,019 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 27,23,88,783 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

கல்வி தொலைக்காட்சி மூலம் புதிய பாடங்கள் இன்று முதல் தொடக்கம்..

Sat Jun 19 , 2021
கல்வி தொலைக்காட்சி மூலம் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ ,மாணவிகளுக்கு புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி மூலம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும் , தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று ஏற்ற இறக்கமாகவே உள்ளது. எனவே, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான […]
kalvi-Television
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய