இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் – ஒரே நாளில் 62,480 பேருக்கு தொற்று உறுதி ..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1,587 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,80,647 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,83,490 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 88,977 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,98,656 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,89,60,399 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

கேனான் நிறுவனத்தின் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ..

Fri Jun 18 , 2021
கேனான் நிறுவனமானது ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கேனான் நிறுவனம் தனது ஊழியர்களின் நலனுக்காக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள உள்ள ‘கேனான்’ தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ‘சிரிப்பை ஸ்கேன் செய்யும்’ கேமரா ஒன்று புதிதாக அறிமுகமாகியுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்துக்குள் நுழையும்போது தங்களது சிரித்த முகத்தை காண்பித்தால் மட்டுமே இது உள்ளே நுழைய அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் பணி நேரத்தில் 100 சதவீதம் […]
canon-smiling-tech-camera
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய