இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் – இன்று புதிதாக 41,383 பேருக்கு தொற்று..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,12,57,720 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,04,29,339 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,18,987 ஆகும்.இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது.நேற்று ஒரே நாளில் 38,652 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,09,394 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 41,78,51,151 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் : இன்று முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - பள்ளி கல்வித்துறை ..

Thu Jul 22 , 2021
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலானது கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை வியாழக்கிழமை (இன்று) முதல் இணையத்தின் வாயிலாக […]
govt-12h-students-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய