
தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருள்காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- கடைகள் உணவகங்கள் இன்று முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்களில் 100 பேர் வரை பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம்.
- பண்டிகை காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.