இரண்டாம் கட்ட நீட் தேர்வு விண்ணப்பத்தில் முகவரி, கல்வித்தகுதி போன்றவற்றை திருத்தம் செய்ய அக்.10 வரை அவகாசம்..

முதல் கட்ட நீட் தேர்வு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட நீட் தேர்வுக்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் விண்ணப்பத்தில் குடியுரிமை, கல்வி தகுதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய தற்போது அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் முதல் கட்ட தேர்வு வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Post

தமிழகத்தில் சட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு..

Mon Oct 4 , 2021
தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தற்போது பெறப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது […]
LLB-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய