
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை இணையத்தில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி காவல் ,சிறை ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் காலியாக உள்ள மொத்தம் 11,813 பணியிடங்களுக்கான தேர்வை 37 மாவட்ட மையங்களில் நடத்தியது.
இதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrbonline.org/ என்ற இணையத்தில் நேற்று மாலை (19.02..2021) வெளியிடப்பட்டது.தகுதிபெற்றவர்கள் 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் .
தகுதி பெற்றவர்களுக்கு ,அடுத்த கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்த்தல்,உடற்கூறு அளத்தல் ,உடற்த் தகுதி தேர்வு மற்றும் உடற்த்திறன் போட்டி போன்றவற்றிற்கு அழைப்பு கடிதமானது விரைவில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழும இணையத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்வு முடிவுகளை பெற TNUSRB-Eligible-Candidates