
பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் இணையவழி மூலம் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தோ்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தோ்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் இன்று (திங்கள்கிழமையுடன்) நிறைவு பெறவுள்ளது.
இந்தநிலையில், தோ்வுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட், எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தோ்வு மற்றும் அரியா் பாடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.