
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது .
ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மொத்தம் 66 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்த தேர்வு முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது .இதில் ஒரு பதவிக்கு 50 பேர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .துணை ஆட்சியர் ,துணை கண்காணிப்பாளர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ,ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் ,மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ),வணிகவரி உதவி ஆணையாளர் என மொத்தம் 66 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .