
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக வரும் மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1-க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுக்கு 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்தனர்.கொரோனா விதிமுறைகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தோ்வுக் கூடங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.இதனடிப்படையில்,முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தற்போது, குரூப் 1-க்கான முதன்மைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு எழுதவருவோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் மற்றும் தேர்வாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குரூப் 1 தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.