
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் TRB தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு தேதியானது நிர்வாக காரணங்களை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்விற்கு தங்களது கல்லூரிகளை தேர்வு மையங்களாக ஒதுக்கீடு செய்யுமாறு அனைத்து பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு வகையான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி,TRB தேர்வு வாரியமும் விரிவுரையாளர் தேர்வை நடத்த முடிவு செய்து தேர்வு தேதியை வெளியிட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்விற்கான ஹால் டிக்கெட்டும் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் TRB தேர்வானது வரும் டிசம்பர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.