
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக வரவேற்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வாணையமானது செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது .
மேலும் காலியாக உள்ள பணியிடங்களான காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை போன்ற பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 13-ல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது .
மொத்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வானது மாவட்டம் வாரிய நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது .
மேலும் விரிவான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .