
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில்,தேர்வுகளுக்கான தேதிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன .
கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன,கடந்த ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவி மின்னியல் பொறியாளர் (400),இயந்திரவியல் உதவிப் பொறியாளர் (125),கட்டடவியல் உதவிப் பொறியாளர் (75),போன்ற பணியிடங்களுக்கு இணையவழியாக தேர்வுகள் வெறும் ஏப்ரல் 24,25 மற்றும் மே 1,2 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன .
இதேபோன்று இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிக்கு வரும் மே 8,9,15,16 ஆகிய தேதிகளில் கணினி வழி மூலம் தேர்வு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது .மேலும் விண்ணப்பதாரர்கள் அவரவர் மின்னல் அஞ்சல் முகவிரிக்கு சென்று விவரங்களுக்கு உறுதிபடுத்திக்கொள்ளவும் .