
திருவையாறில் உள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை விழா வரும் பிப்ரவரி 1 ,2 தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது .தஞ்சை மாவட்டம், திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியானது திங்கட்கிழமை அன்று நடைபெற்றது .
ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும் .ஆனால் நடப்பாண்டில் கொரோன பரவல் காரணமாக 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் ,கொரோன தொற்றின் காரணமாக 200 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது .
தியாகராஜ ஆராதனை விழாவானது பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் பிப்ரவரி 2 ஆம் தேதி நிறைவடைகிறது .இதில் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்தின கீர்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது .