திருவாடானை – ஆடானைநாதர் கோவில்-முக்தி பெற மற்றும் முன்ஜென்ம தீய வினைகள் நீங்க …

சிவஸ்தலங்களில் 9 வது தலமான பாண்டிய நாடு பாடல் பெற்ற தளமாக இருப்பது திருவாடானை ஆகும் .இங்கு வீற்றிருக்கும் இறைவனின்பெயர்:ஆடானைநாதர்,ஆதிரத்தினேசுவரர்,அஜகஜேஸ்வரர் மற்றும் இறைவியின் பெயர் -சிநேகவல்லி, அம்பாயிஅம்மை ஆகும்.

ஆலயத்தின் வழிபாடு மற்றும் சிறப்பு :

அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் ஸ்தளமானது காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .இந்நேரங்களில் இறைவழிபாடானது நடைபெறும் .

இக்கோவில் அமைந்திருப்பது நான்கு யுகங்களிலும் ,திருவாடானை என்னும் ஊரானது ,தேவலோகத்தில் உள்ள அமிர்தமானது ஒரு துளி பூமியில் சிந்தியதால் திருவாடானை ஊர் பிறந்ததாக திருவாடானை தலபுராணம் கூறுகிறது .இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபடுவோருக்கு இறைவன் முக்தி அளிப்பதால் இவ்வூர் முக்திபுரம் எனவும் ,சூரிய பகவான் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும் ,வாருணி சாபம் நீங்கியதால் ஆடானை எனவும் அழைக்கப்படுகிறது .

இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடனும் மற்றும் ஒரு திருமுகத்துடனும் உடன் தேவியர் இருவருடனும் காட்சியளிப்பார் .

வாருணி சாபம் நீக்கம் :

நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் துர்வாசரை ,வருணனின் மகனான வாருணி முனிவர் துர்வாசரை மதிக்காமல் சென்றதால் வாருணி முனிவரின் சாபத்துக்கு ஆளாகினான் ..முனிவர் துர்வாசர் வாருணியை பார்த்து நீ ஆடுத் தலையையும் ,யானை உடலையும் பெறுமாறு சாபமிட்டார் ..பின்னர் வாருணி அவ்வாறாகவே உருவம் தரித்தார் .தனது தவறை உணர்ந்த வாருணி முனிவரிடம் சாபவிமோசனம் வழங்கும் மாறு வேண்டினான் .முனிவர் ,சூரிய தேவனால் வழிபடப்பட்ட இத்தலத்து இறைவனை வழிபட்டால் சாபவிமோசனம் பெறுவாய் என கூறினார் .முனிவர் கூறியபடியே வாருணியும் இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான் .வாருணியின் சாபம் நீங்கியதால் இத்தலம் ஆடானை எனவும் ,இத்தலத்தில் இருக்கும் இறைவன் ஆடானைநாதர் எனவும் வழங்கப்பெறுகிறார் .

ஆதிரத்தினேசுவரர் என்னும் பெயர் தோன்ற காரணம் :

சூரிய தேவன் ஒருமுறை தாம் மட்டுமே அதிக ஒளி பொருந்தியவன் என்ற கர்வத்துடன் இருந்தார் .இதன் காரணமாக நந்தி தேவர் ,சூரியனின் கர்வத்தை அடக்க சூரியனிடமிருந்து ஒளி ஈர்க்கப்பட்டு ஒளி குன்றியவனாக மாற்றினார் .பின்னர் சூரிய தேவன் தம் முழு ஒளியையும் பெற பிரம்மனிடம் சென்று முறையிட்டார் .பின்பு பிரம்ம தேவர் கூறிய தளத்துக்கு சூரிய தேவன் சென்று தன்பெயரால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி ,நீலமணியால் ஆவுடையார் மற்றும் லிங்கம் உருவாக்கி ,ரத்தினமயமான லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதால் மீண்டும் தன் ஒளியை திரும்ப பெற்றார் .சூரிய தேவன் நீல நிற மற்றும் ரத்தினமயமான இறைவனை வழி பட்டதால் இத்தலம் ஆதிரத்தினேசுவரர் என அழைக்கப்பெற்றது .

ஆலயத்திற்கு செல்லும் வழி :

சிவகங்கையில் இருந்து தொண்டி சாலையில் காளையார்கோவில் வழியாக சுமார் 50 கி.மீ. தொலைவிலும்,பின்னர் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 42 கி.மீ. தொலைவிலும்,திருவாடானை கோவில் உள்ளது .சிவகங்கை ,காரைக்குடி மற்றும் தேவகோட்டையிலிருந்து பேருந்த்துக்கள் இயக்கப்படுகின்றன .

Next Post

இன்றைய ராசிபலன்கள் -28-09-2020

Mon Sep 28 , 2020
மேஷம் மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவும் ,அதிர்ஷ்டமான நாளாகவும் அமையும். .இன்று பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் மற்றும் நிதி நிலைமை சிறப்பாகவும் அமையும் .இன்று உங்கள் குடும்பத்ததில் மகிழ்ச்சியும் ,குடும்பத்திற்கான செலவுகளும் கட்டுப்படுத்தப்படும் .உங்கள் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .நீங்கள் உற்சாகமாகவும் ,நல்ல சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள் . ரிஷபம் இன்று உங்கள் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் குறைந்து,லாபம் […]
indraya-raasi-palan-28-09-2020

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய