
சனிப்பெயர்ச்சி விழாவானது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழாவானது வெகு விமர்சயா நடைபெறும் .ஆனால் இந்த ஆண்டு வாக்கியபஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழாவானது டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது .
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்கதர்களுக்கு ஆன்லைன்ல் முன்பதிவு பெறுபவர்களுக்கு மட்டுமே அனுமதி என ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறியுள்ளார் .சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறியதாவது ,கொரோனாதடுப்பு நடவடிக்கையின் காரணமாக சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு www.thirunallarutemple.org என்ற இணையதளம் மூலமாக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து அடையாள அட்டையை கொண்டு வருபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறிய ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா கூறியுள்ளார் .சனிப்பெயர்ச்சி முந்தைய வாரம் முதல் சனிப்பெயர்ச்சி தொடர்ந்து 4 வாரம் என ஆறு வாரங்கள் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .
ஆலயத்திற்கு அனுமதி பெற்று வரும் பக்தர்கள் அனைவரையும் வெப்பமானி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தெரிவித்தார்.