சனிப்பெயர்ச்சி விழா : திருநள்ளாறு மற்றும் திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா !!

திருநள்ளாறு :

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவானது வெகு விமர்சையாக நாளை (ஞாயிற்றுகிழமை)நடைபெற உள்ளது .இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

சனீஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை (நாளை – டிச.27) காலை 5 .22 மணிக்கு தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் .இதனால் சனிப்பெயர்ச்சியின் பலன்களை அடையும் ராசிக்காரர்கள் யார் யார் ??..

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை ஸ்ரீ சனீஸ்வரபகவான் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளச்செய்தார் .சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும் எண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ,இதனை எதிர்த்து ,உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது .இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்தது ,நாளை சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் கொண்டுவர கட்டாயமில்லை என உத்தரவு பிறப்பித்தது .

திருக்கொடியலூர்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அருகில் திருக்கொடியலூர் மங்கள் சனீஸ்வரர் கோவில் ஸ்தலம் அமைந்துள்ளது .இத்தலத்திற்கு அருகில் திருமீயச்சூரில் புகழப்பட்ட ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது .

திருக்கொடியலூர் மங்கள் சனீஸ்வரர் கோவிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவினை பக்தர்கள் இணையதளமூலம் காண வழி வகை செய்யப்பட்டுள்ளது. மங்கள சனீஸ்வர பகவான் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 .22 மணியளவில் ,தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்யும் நிகழ்வையொட்டி சனி பரிகார ஹோமமும் ,பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது .

சனிப்பெயர்ச்சி விழாவினை நேரடியாக காண முடியாத பக்தர்களுக்கு ,அதிகாலை 4 மணி முதல்,சனிப்பெயர்ச்சி விழாவினை https://www.youtube.com/c/templelivestream என்ற இணையதள மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது .

Next Post

தமிழ்நாட்டில் ஓர் புதிய மாவட்டம் உதயமானது : மயிலாடுதுறை மக்களின் கனவு நிறைவேறுகிறது !!

Mon Dec 28 , 2020
தமிழ்நாட்டில் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(டிச.28) சென்னையிலிருந்து காணொளி மூலம் திறந்து வைக்கிறார் .மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான அரசாணையானது கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது .இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க சிறப்பு அலுவலராக ரா.லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீ நாதா ஆகியோர் நியமிக்கப்பட்டு ,எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசுக்கு […]
mayiladuthurai-District-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய