நவராத்திரி லட்சார்ச்சனை உற்சவம் : திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் வெகுவிமர்சியாக தொடங்கியது !!

நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை உற்சவமானது இன்று (சனிக்கிழமை ) தொடங்கியது.

நவராத்திரி லட்சார்ச்சனை பூஜை :

நவராத்திரி விழாவை முன்னிட்டு திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில் சனிக்கிழமை முதல் தினசரி காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் லட்சார்ச்சனைகளும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெற்று வருவதாகும் .முதல் நாளான சனிக்கிழமை அன்று அனுக்நை ,விக்னேஸ்வர பூஜை நடைபெறும் .பின்னர் ஸ்ரீலலிதாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் ஆனது மாப்பொடி ,மஞ்சள் பொடி,எலுமிச்சைப்பழம் ,இளநீர் ,பன்னீர் ,சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ,சிறப்பு அலங்காரங்களால் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு ஆராதனை நடந்தது .

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவிலின் சிறப்பம்சம் :

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோவில் ஆனது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பேரளம் அருகில் உள்ள திருமீயச்சூறில் ஸ்ரீலலிதாம்பிகை உடனுறை ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயமானது உள்ளது .இத்திருத்தலமானது ஸ்ரீ வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமானது ஆகும் .இத்தலத்தில் தான் திருமால் ,எமதர்மன் ,அருணன்,சூரியன் ஆகியோர் வழிபட்ட சிறப்பு தலமாகவும் விளங்குகிறது .அனைத்து சக்தி தளங்களிலும் ஓதப்படும் ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் இத்திருத்தலத்தில் தான் உருவானது .இத்திருக்கோவிலின் பூஜைகள் அறநிலையத்துறை மற்றும் அரசு கட்டுப்பாடு நெறிமுறைக்கு உட்பட்டதாகும் .

Next Post

நியூசிலாந்து பிரதமர் - ஜெசிந்தா ஆர்டெர்ன் ! 2 -வது முறையாக பிரதமரான ஜெசிந்தா !

Sat Oct 17 , 2020
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்கிறார் .நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைமையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் அபார வெற்றி பெற்று 2 வது முறையாக பிரதமரானார் . கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிய நேரத்தில், நியூசிலாந்தின் ஜெசிந்தா தனது முற்போக்கு சிந்தனையோடு செயல்பட்டு சரியான நேரத்தில் திட்டமிட்டு கொரோனோவின் தொற்றை படிப்படியாக குறைத்தார் .ஜெசிந்தா அவர்கள் […]
jesintha-new-zealand
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய