இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,164 பேருக்கு கொரோனா தொற்று..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,11,44,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 499 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,03,08,456 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,14,108 ஆகும்.நேற்று ஒரே நாளில் 38,660 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,21,665 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 40,64,81,493 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ..

Mon Jul 19 , 2021
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26ந் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் […]
Higer-education-admission-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய