
அதிவிரைவாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை வைரஸை விடவும், இந்த புதிய வகை வைரஸ் மிக அதிகவிரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா தற்போது மிக அதிகமாகப் பரவி வருகறிது. டெல்டா வகை கரோனா வைரஸைக் காட்டிலும், இந்த புதிய வகை கொரோனா 10 சதவீதம் மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும், இது தற்போது அமெரிக்காவிலும் பரவி வரவதாகவும் கூறப்பட்டுள்ளது. மிக விரைவாகப் பரவும் தன்மை கொண்டிருப்பதோடு, இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அல்லது வீரமியமிக்க தொற்றாகவோ இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஏஒய்.4.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.மேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சார்ஸ் சிஓவி 2 உருமாறிய டெல்டா வைரஸின் புதிய வகை கண்டறியப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
இதன் காரணமாக இந்தியாவில் பரவியிருக்கும் கொரோனா தொற்றின் மரபணு அறியும் பரிசோதனை திட்டம், தற்போது மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை, இந்தியாவில் கொரோனா பாதித்த 68 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா மரபணு பரிசோதனையில், இதுவரை யாருக்கும் இந்த புதிய தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட அறிக்கையில், கொரோனா தொற்றுப் பரவல் கண்காணிப்பை தற்போது தீவிரப்படுத்தியுள்ளோம், அடுத்து வரும் நாள்களில், வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிகமான மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்படும். எனவே, ஏஒய் 4.2 வகை புதிய கொரோனா பரவுவதை முன்கூட்டியே கண்டறிய முடியும். மேலும் கொரோனாவால் பாதித்திருப்பவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.