இந்தியாவில் 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,99,35,221 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1422 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,88,44,199 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,88,135 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 78,190 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,02,887 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 28,00,36,898 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் 16 -வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள் ..

Mon Jun 21 , 2021
தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் தொடங்கியது. 2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.ஆளுநர் உரையில்,, தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களில் […]
Governor-speech-in-16h-assembly
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய