நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் – மத்திய கல்வித்துறை அறிவிப்பு..

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வானது வரும் செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடப்பாண்டு ஆகஸ்டு 1-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா அதிகரித்ததன் காரணமாக தேர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை சமூக இடைவெளி காரணமாக(கொரோனா அச்சுறுத்தல்) ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வானது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையானது, நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் தொடங்கும்’ என்றும் கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Jul 12 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 290, ஈரோட்டில் 193 பேருக்கும்,சேலத்தில் 170 பேருக்கும், தஞ்சாவூரில் 191 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 36 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த […]
district-wise-corona-abstract-in-tamilnadu-12-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய